இந்த வாரம் தமிழில் ஓடிடி ரிலீஸ் என்னென்ன படங்கள்!

Webdunia
புதன், 5 ஜூலை 2023 (13:34 IST)
கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம், ஃபர்ஹானா மற்றும் சித்தார்த்தின் டக்கர் ஆகிய படங்கள் இந்த வாரம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளன.

காதர்பாட்சா – இயக்குனர் முத்தையாவின் மசாலா டெம்ப்ளேட்டில் வெளியான மற்றொரு படம். இந்து முஸ்லிம் உறவினைப் பற்றி எடுக்கப்பட்ட இந்த படம் திரையரங்குகளில் ரசிகர்களை கவரவில்லை. இந்நிலையில் ஜி5 ஓடிடி தளத்தில் இந்த படம் ஜூலை 7 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது.

ஃபர்ஹானா – ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த இந்த படம் சோனி லைவ் தளத்தில் இந்த வாரம் முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. இந்த படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றும் பெரிய அளவில் ரசிகர்களை திரையரங்கிற்குள் ஈர்க்கவில்லை. ஆனால் ஓடிடி ரிலீஸூக்கு பிறகு ரசிகர்களை ஈர்க்கலாம் என சொல்லப்படுகிறது.

டக்கர் – சித்தார்த்தின் இந்த படம் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் ஆனது. இந்த படத்துக்காக சித்தார்த் பல மீடியாக்களில் பப்ளிசிட்டி செய்தும் எந்த பலனும் இல்லை. இந்நிலையில் நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்த படம் ரிலீஸாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எஜமான் காலடி மண்ணெடுத்து.. ரஜினியின் 75வது பிறந்த நாளில் ரீரிலீஸ் ஆகும் எஜமான்..!

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments