Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லால் சலாம் முதல் லவ்வர் வரை… இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள்!

vinoth
புதன், 6 மார்ச் 2024 (07:00 IST)
ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’ திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் முதல் காட்சியில் இருந்தே எதிர்பார்த்த அளவு கூட்டம் வரவில்லை என சொல்லப்பட்டது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கியமான ரோல்களில் நடித்துள்ளனர். ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். ஆனால் படம் ரிலீஸூக்குப் பிறகு படுதோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இந்த படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் மார்ச் 8 ஆம் தேதி ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. அதே போல பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகி கவனம் பெற்ற லவ்வர் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது.

பொங்கலுக்கு ரிலீஸாகி நல்ல கவனம் விஜய் சேதுபதி மற்றும் கரினா கபூர் நடித்த மெர்ரி கிறிஸ்துமஸ் திரைப்படமும் மார்ச் 8 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. அதே போல ஹனுமன் திரைப்படம் ஜி 5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல யாத்ரா 2 மற்றும் அன்வேஷிப்பின் கண்டதும் ஆகிய படங்களும் மார்ச் 8 ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைம் மற்றும் நெட்பிளிக்ஸ் ஆகிய ஓடிடிகளில் வெளியாக உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. ட்விட்டரில் வாழ்த்தாத ரஜினிகாந்த்..!

பழம்பெரும் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது.. குவியும் வாழ்த்துக்கள்..!

ரியாலிட்டி ஷோ வின்னரான பருத்திவீரன் சுஜாதா!

'பாரத் யாத்ரா' நிகழ்வின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ஜெயராம்!

’குட் நைட்’ படப்புகழ் நடிகர் மணிகண்டனின் அடுத்த படத்திற்கு ‘குடும்பஸ்தன்’ என பெயரிடப்பட்டுள்ளது!

அடுத்த கட்டுரையில்
Show comments