Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லியோ படத்தில் திரிஷாவின் கேரக்டர் இது தான்....வேற லெவல் அப்டேட்!

லியோ படத்தில் திரிஷாவின் கேரக்டர் இது தான்....வேற லெவல் அப்டேட்!
, வியாழன், 4 மே 2023 (16:11 IST)
விஜய் நடிக்கும் லியோ படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் படப்பிடிப்பு ஓரளவுக்கு முடிந்துவிட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ மற்றும் தி ரூட் இணைந்து தயாரிக்கும் இந்த படம் வருகின்ற அக்டோபர்-19ம் தேதியன்று உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 
 
நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய்யுடன் சேர்ந்து த்ரிஷா நடிக்கும்  இசையமைக்கிறார். இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை திரிஷாவுக்கு லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் வாழ்த்து கூறியுள்ளது. அந்த பதிவில், உங்களுடன் பணிபுரிவதில் ஒரு முழுமையான மகிழ்ச்சி. மகிழ்ச்சியும் கருணையும் பிரகாசிக்கும் மற்றொரு வருடத்திற்கு வாழ்த்துக்கள்! 
 
பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரிஷா என செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தந்து ட்விட்டர் பக்கத்தில் த்ரிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி ‘அர்ஜுனாரு வில்லு’ இலிருந்து இப்போ "அலெக்சா"வாக  நடிக்கிறார் ‘அழகிய தாய் மொழி இவள்.. இவள் சிரிக்கையில் இரவுகள் பகல்" என த்ரிஷாவின் கேரக்டர் பெயர் அலெக்சா என்பதை அறிவித்துள்ளனர். மேலும் , லியோ உங்களின் 67வது படம் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது என கூறியுள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்த தளபதி வீடியோ இன்று ரிலீஸ்!