Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருட்டு டிவிடி-யை ஒழிக்க இதுதான் வழி: கே. பாக்யராஜ் கருத்து!

திருட்டு டிவிடி-யை ஒழிக்க இதுதான் வழி: கே. பாக்யராஜ் கருத்து!
, திங்கள், 20 பிப்ரவரி 2017 (18:11 IST)
இந்தியன் சினி மேக்கர்ஸ் சார்பில் ஜெயக்குமார் தயாரித்துள்ள படம் ‘சிரிக்க விடலாமா’ இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஜெயக்குமார் பாடல்களை எழுதி இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. 

 
படத்தை கே.பாக்யராஜின் உதவியாளர் வி.பி.காவ்யன் இயக்கியுள்ளார். படத்தில் வி.ஆர்.விநாயக், நிதின் சத்யா, ஷீலா,  தீபா,சீனிவாசன், சவுமியா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்களை வெளியிட்டார் கே.பாக்யராஜ். இது குறித்து பேசுகையில், ‘‘எப்போதுமே நல்ல படங்களுக்கு ரசிகர்களிடத்தில் வரவேற்கத்தான் செய்கிறார்கள். படம் சரியாக ஓடவில்லை  என்றால் அதற்கு ரசிகர்களை குறை சொல்ல கூடாது. இளைஞர்கள் எதிர்பார்க்கிற மாதிரி சினிமா எடுக்க வேண்டும் என்றார்.
 
மேலும் கூறுகையில் முன்பெல்லாம் குடும்பமாக படம் பார்க்க வருவார்கள். ஆனால் தற்போது டிக்கெட் விலை அதிகமாக உயர்ந்துவிட்டதினால் கூட்டம் குறைந்துவிட்டது. சினிமா பட டிக்கெட்டின் விலை உயர்ந்துவிட்டதை நாசுக்காக வெளிப்படுத்தினார். இதனால் திருட்டு  டிவிடி.,யை ஒழித்து விட முடியும் என கே. பாக்யராஜ் யோசனை கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வடிவேலுடன் கருத்து வேறுபாடு... படமே வேண்டாம் என்று நடையை கட்டிய இயக்குனர்