Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2.0 முதல் நாள் வசூலே இதனை கோடியா! - கொண்டாடிய விநியோகிஸ்தர்கள்

Webdunia
சனி, 1 டிசம்பர் 2018 (10:49 IST)
ரஜினியின் 2.0 முதல் நாள் வசூல் விபரம் வெளியாகியுள்ளது. 
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியாகியிருக்கும் 2.0 திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 
 
2.0 திரைப்படம் வெளியான முதல் நாளில் சென்னை நகரத்தில் மட்டும், 2.64 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறதாம். 
 
முதல் நாள் வசூலின் படி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 18.2 கோடி, கர்நாடகாவில் 8.25 கோடி, கேரளாவில் 4.15 கோடி என தென்னிந்தியாவில் சாதனை படைத்துள்ளது. குறிப்பாக கேரளாவில், அதிக வசூல் செய்த நான்காவது 'நான் - மலையாள' திரைப்படம் என்ற பெருமையும் பெற்றிருக்கிறது. இது வரை சர்கார் (5.62 கோடி), பாகுபலி (5.45 கோடி), மெர்சல் (4.65 கோடி) என மூன்று படங்கள் இந்த சாதனையைப் படைத்துள்ளன. 
 
இது தவிர, வட மாநிலங்களான டெல்லி, உத்திரபிரதேசம், பஞ்சாப், பிகார் ஆகிய இடங்களிலும் முதல் நாளில் வசூல் சாதனைப் படைத்துள்ளது ரஜினியின் 2.0. 
 
இதனால் 2.0 படத்தை வாங்கிய விநியோகிஸ்தர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடிவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பட நடிகர் மரணம்? இணையத்தில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

அல்லு அர்ஜுன் & அட்லி இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா?

குட் பேட் அக்லிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு… முதல் நாளில் இத்தனைக் கோடி வசூலிக்க வாய்ப்பா?

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷூட்!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வெப்பத்தில் இருந்து விடுதலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments