Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஹாலிவுட் நடிகையின் கதாப்பாத்திரம் இதுதான் - ராஜமௌலி டுவீட்

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (18:16 IST)
இந்திய சினிமாவில் முக்கியமான மற்றும் பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி. இவர் இயக்கிவரும் டிரிப்பில் ஆர் படம் வேகமாக தயாராகி வருகிறது. இப்படம் வரும்  அக்டோபர் 13 ஆம் தேதி ரிலிஸாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.ஆர்.ஆர் படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர்.

ஏற்கனவே ஆர் ஆர் ஆர் படத்தில் ராம்சரண் அல்லூரி சீதராம ராஜூவாக நடித்துள்ள கதாப்பாத்திர ப்ரமோ வெளியானது.

இதையடுத்து, ஜூனியர் என் டி ஆர் நடித்துள்ள கதாபாத்திரப் ப்ரோமோ வெளியானது. இதில் ஜூனியர் என்.டி,.ஆர் , கொமரம் பீம் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

கொமரம் பீமை ஒரு மதத்திற்குள் அடக்க முயற்சி செய்துள்லதாக ராஜமௌலி மீது விமர்சனம் உருவாகியுள்ளது.

 இந்நிலையில், பழங்குடியின மக்களிடையே இதற்குக் கடும் எதிர்ப்பும் விமர்சனங்களும் எழுந்துள்ளது.

 விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும் இப்படம் இன்னொரு பக்கம் கொரொனா காலத்தில் சில தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கில் படுவேகமாக நடைபெற்று வருகிறது.

மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் இணைந்து பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக அஜய் தேவ்கான், ஆலியா பட், ஸ்ரேயா போன்றோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் ஹாலிவுட் நடிகை ஒலிவா மோரிஸ் என்பர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இவர் எந்தக்கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், இவர் ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஜெனிபர் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் என்ரு படக்குழு அறிவித்து இதுகுறித்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.  இப்புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நான் ஈ, மஹதீரா,பாகுபலி படத்திற்குப் பிறகு கீரவாணி இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்க்து.OliviaMorris891 as #Jennifer...:) #RRRMovie #RRR

தொடர்புடைய செய்திகள்

நிவேதா பெத்துராஜ் வீடியோவின் மர்மம் இதுதான்.. இதுக்கு தானா இந்த அலப்பற..!

அஞ்சாமை திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

பாலாவின் ’வணங்கான்’ ரிலீஸ் எப்போது? தயாரிப்பாளரின் முக்கிய அறிவிப்பு!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோ ஆல்பம்!

மாடர்ன் டிரஸ்ஸில் ஸ்டைலான போஸ் கொடுத்த சமந்தா!

அடுத்த கட்டுரையில்
Show comments