ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் தயாரித்து இயக்கிய 'ஒன் ஹார்ட்' என்ற திரைப்படம் இன்று தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இந்த படத்தின் மும்பை புரமோஷன் நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டார்.
அப்போது அவரிடம் கர்நாடக மாநில பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் கூறிய ரஹ்மான், 'என் இந்தியா வளர்ச்சியை நோக்கியும், அன்பாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றேன். ஆனால் இதுமாதிரி கொலைகள் நடந்தால் அது என்னுடைய இந்தியாவெ இல்லை. கவுரி லங்கேஷ் கொலையால் மிகுந்த மனவருத்தம் அடைந்தேன்' என்று கூறினார்.
'ஒன் ஹார்ட்' படம் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ரஹ்மான், 'ஹாலிவுட்டில் மைக்கேல் ஜாக்சனை வைத்து உருவாக்கப்பட்ட 'திஸ் இஸ் இட்' (This is it) பிரம்மாண்ட வெற்றி பெற்ற கன்சர்ட் வகைத் திரைப்படம். இதை முன்மாதிரியாகக் கொண்டு உருவாகியிருக்கிறது 'ஒன் ஹார்ட்' படம்' என்று பெருமையுடன் கூறினார்.