Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவது உறுதி; ஜிகர்தண்டா இயக்குனர்

Webdunia
சனி, 31 மார்ச் 2018 (16:03 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் வசனங்களே இல்லாமல் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் `மெர்குரி' படத்தில் சனத் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், மேயாத மான்  இந்துஜா, அனிஷ் பத்மன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தினை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் பென் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளனர்.
 
பின்னணி இசையின் மூலம் நகரும் இந்த படத்தில் பிரபுதேவா எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அண்மையில் இந்த படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதியன்று வெளியாக இருந்தது.
இந்நிலையில் தமிழ் திரைப்படத்துறையினர் ஸ்டிரைக் நடத்தி வருவதால் மெர்க்குரி படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்ற குழப்பம் நிலவிவருகிறது. ஸ்டிரைக் நீடித்து ஒரு வேளை ஏப்ரல் 13 தேதியன்று படத்தை வெளியிட முடியாமல் போனாலும், ஏப்ரல் 12 ந் தேதி சர்வதேசத் திரைப்பட விழாவில் 'மெர்க்குரி' திரைப்படம் ப்ரீமியர் ஷோவாக திரையிடப்படுவது உறுதி என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments