Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருட்டு பயலே 2 படத்தில் ரீ என்ட்ரியாகும் வித்யாசாகர்

திருட்டு பயலே 2 படத்தில் ரீ என்ட்ரியாகும் வித்யாசாகர்
, சனி, 19 நவம்பர் 2016 (14:57 IST)
திருட்டு பயலே இரண்டாம் பாகத்தில் நடிக்க பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.


 
 
ஏ.ஜி.எஸ்.நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. சுசி கணேசன் படத்தை இயக்குகிறார். இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. 
 
ஒருகாலத்தில் மெலடி கிங்காக வலம்வந்த வித்யாசாகர்தான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதுகுறித்து இயக்குனர் சுசிகணேசன் கூறும்போது... 

"தற்போது கோலிவுட்டில் புதிய இளைஞர்கள் இசையமைப்பாளர்களாக உருவாகி வருகின்றனர். ஆனால், அவர்களிடம் நான் நினைக்கும் மெலடி இசை இல்லை. எனது திருட்டு பயலே படத்திற்கு மெலடி கிங் வித்யாசாகரின் இசை பொருத்தமாக இருக்கும் என்பதால் அவரை தேர்வு செய்தேன்" என்று தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளுக்காக தனுஷிடம் வாய்ப்பு? - கவுதமி விளக்கம்