Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேதகு படம் மக்களிடம் போகக் கூடாது என்றே இப்படி செய்கிறார்கள்… இயக்குனர் கிட்டு!

மேதகு படம் மக்களிடம் போகக் கூடாது என்றே இப்படி செய்கிறார்கள்… இயக்குனர் கிட்டு!
, வெள்ளி, 2 ஜூலை 2021 (11:13 IST)
சமீபத்தில் வெளியான மேதகு திரைப்படம் மூலமாக கவனத்தை ஈர்த்துள்ளார் இயக்குனர் தி கிட்டு.

விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைவர் பிரபாகரனின் இளமைக்கால வாழ்வை சொல்லும் படமாக வெளியாகியுள்ளது மேதகு. இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் அந்த படத்தின் இயக்குனர் தி கிட்டுவுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் தி கிட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை நயன்தாராவையும் அவரின் தனிப்பட்ட காதல் வாழ்க்கையும் இழிவு செய்யுமாறு உருவாக்கப்பட்ட மீம்ஸை தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த ஸ்க்ரீன்ஷாட்டை இப்போது பலரும் பகிர்ந்து அவருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதே போல தமிழக அரசியல் தலைவர்களான பெரியார், அண்னா, கலைஞர் மற்றும் திருமா வளவன் ஆகியோரை பற்றி தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து அவர் வெளியிட்ட பதிவுகளும் கண்டனங்களை சந்தித்து வருகின்றன.

இந்நிலையில் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக ‘மேதகு படம் அனைவரையும் சென்று சேருவதற்கு தடையாகவே இந்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த படம் வெளியாக அனைத்துக் கட்சியினரும் பாகுபாடின்றி உழைத்தனர். நான் பேசியது புண்படுத்தி இருந்தால் அதற்கு வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாஸ்டர் செஃப் புதிய ப்ரோமோவை வெளியிட்ட விஜய் சேதுபதி!