''நான் சினிமாவில் நடிப்பதை அவர்கள் எதிர்த்தனர்''- ஐஸ்வர்யா லட்சுமி

Webdunia
திங்கள், 5 ஜூன் 2023 (19:15 IST)
மலையாள சினிமாவின்  முன்னணி நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி, 'சினிமா தொழிலை தன் பெற்றோர் மரியாதைக்குரிய தொழிலாகப் பார்க்கவில்லை' என்று தெரிவித்துள்ளார்.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இவர், விஷாலுடன் ஆக்சன், தனுஷுடன் ஜெகமே தந்திரம், ஆர்யா உடன் கேப்டன், விஷ்ணு விஷாலுடன் இணைந்து கட்டா குஸ்தி   உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்திருந்தார்.

சமீபத்தில், வெளியான பொன்னியின் செல்வன் 1 -2 ஆகிய படங்களில் பூங்குழலி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

இவர், நடிப்பது மட்டுமின்றி, தயாரிப்பாளராகவும் இயங்கி வருகிறார். முன்னணி நடிகை சாய்பல்லவி நடித்த கார்கி என்ற படத்தையும் தயாரித்து பாராட்டுகள் பெற்றிருந்தார்.

தற்போது, துல்கர் சல்மானுடன் கிங் ஆப் கோத்தா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தன் சினிமா தொழில் பற்றி அவர் கூறியதாவது: '' நான் எம்.பி.பி.எஸ் பயிற்சி எடுக்கும்போதே, நடிகையாகும் வாய்ப்பு கிடைத்தது.  நான் சினிமாவில் நடிப்பதற்கு பெற்றோர் எதிர்ப்பு கூறினர் நடிப்பை என் பெற்றோர் மரியாதைக்குரிய தொழிலாகக் கருதவில்லை. சினிமாவில் தொடர்வது எளிதல்ல…அதற்குத் தினமும் போராட வேண்டும்…..'' என்று தெரிவித்துள்ளார்.
 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காந்தாரா சாப்டர் 1 வசூல் சாதனை! ராமேஸ்வரத்தில் தரிசனம் செய்த ரிஷப் ஷெட்டி!

’அவன் வந்துவிட்டான்’.. நடிகை ப்ரினிதி சோப்ரா வீட்டில் சின்ன தீபாவளி..

Bigg Boss Season 9 Tamil: இந்த வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் யார்?

எனக்கு விருது கொடுத்தால் அதை குப்பை தொட்டியில் போட்டுவிடுவேன்: விஷால்

தமிழ் சினிமாவின் கலெக்‌ஷன் ஸ்டார் ப்ரதீப்! Dude படத்தின் 2 நாள் வசூல் நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments