Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் 3-க்கு செல்லும் இரண்டு பிரபலங்கள்! - வெளியானது உண்மை தகவல்!

Webdunia
திங்கள், 17 ஜூன் 2019 (14:54 IST)
பிக்பாஸ் 3 சீசனில் கலந்துகொள்ளும் திரைபிரபலங்கள் குறித்த லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ்.  ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி சீசன் 1 , சீசன் 2 , என்ற இரண்டு பாகமும் பட்டிதொட்டியெங்கும் பரவியது. இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் 3 சீசனுக்கான பணிகள் துவங்கி கமல் பங்குபெறும் ப்ரோமோ ஷூட் படுமும்முரமாக நடைபெற்றது. 
 
ரசிகர்களின் ஏகோபித்த வரவவேற்பை பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3-வது  சீசனும் விஜய் டிவியில் தான் ஒளிபரப்பாக உள்ளது. இதனை தற்போது விஜய் தொலைக்காட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக  வெளியிட்டுள்ளது.மேலும் அந்த ப்ரோமோ வீடியோவில் நடிகர் கமல்ஹாசன் ஸ்டைலாக தோன்றியுள்ளார்.


 
இதற்கு முன்னதாக இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் ரமேஷ் திலக், சுதா சந்திரன், லைலா ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில் அதை மூவருமே மறுத்தனர். அதேவேளையில் நடிகை சாந்தினி தமிழரசன் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்திருந்தார்.


 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால், பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் நடிகை  மதுமிதா மற்றும் இசைக்கலைஞர் மோகன் வைத்யா ஆகியோர் பிக்பாஸ் 3 சீசனுக்கு  செல்வது உறுதியாகியுள்ளது. எனவே கூடிய விரைவில் போட்டியாளர்களின் பட்டியலும் அதிகாரபூர்வமாக  வெளியிட வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் சுசீந்திரனின் உதவி இயக்குனரை கடத்திய 5 பேர் கைது.. காதல் விவகாரமா?

யு, ஏ, யு/ஏ இனி இல்லை. 3 வெவ்வேறு வகையான திரைப்பட சென்சார் சான்றிதழ்..

ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. கட்டிப்பிடித்து மகிழ்ச்சி..!

நடிகர் ராஜேஷ் கட்டிவைத்த கல்லறையில் உடல் அடக்கம்.. கதறி அழுத மகள்..!

‘கேலக்ஸி ஸ்டார்னு சொல்லி என்னை ஓட்ரானுங்க’.. நடிகர் விமல் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments