Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஞ்சாயி எஞ்சாமி…. 25 கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை!

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (08:30 IST)
தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோரின் குரலில் வெளியான எஞ்சாயி எஞ்சாமி பாடல் மொத்தம் 25 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை மற்றும் தயாரிப்பில் இரு வாரங்களுக்கு  எஞ்சாய் எஞ்சாமி பாடல் யு டியூபில் வெளியானது.  இந்த பாடலுக்கான வரிகளை தெருக்குரல் அறிவு எழுத தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் இணைந்து பாடி இருந்தனர். குரலில்  ஏ ஆர் ரஹ்மானின் மாஜா ஸ்டுடியோவின் இணையப்பக்கத்தில் இந்த பாடல் வெளியானது. வெளியானதில் இருந்தே மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த பாடல் திரையுலகினர் பலரின் கவனத்தை ஈர்த்து பாராட்டுகளை பெற்றது.

இந்நிலையில் இப்போது இந்த பாடல் யுடியுபில் 25 கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளது. தமிழில் பெரிய நடிகர்களின் சினிமாப் பாடல்களுக்குக் கூட கிடைக்காத வரவேற்பு இந்த தனியிசைப் பாடலுக்குக் கிடைத்துள்ளது. இந்த பாடல்களுக்கு பல்வேறு மொழிகளிலும் கிடைக்கும் வரவேற்புகள் குறித்த வீடியோக்கள் யுடியூப் தளத்தில் குவிய ஆரம்பித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பெண் சாமியார் கேரக்டரில் நடித்த தமன்னாவுக்கு படுதோல்வி.. பட்ஜெட் 25 கோடி, வசூல் 2 கோடி..!

ஏகே.. ஏகே.. ஏகே.. GT 4 ரேஸில் 2ம் இடம் பிடித்த அஜித்தை கொண்டாடிய அணியினர்..!

பத்ரிநாத்தில் உண்மையில் ஊர்வசி கோவில் இருக்கிறதா? மதகுருக்கள் ஆத்திரம்..!

யார்ரா அந்த பொண்ணு? சச்சின் ரீரிலீஸால் திடீரென வைரல் ஆகும் இந்த நடிகை யார்?

டப்பா ரோல் பண்றதுக்கு.. ஆண்ட்டி ரோல் எவ்வளவோ மேல்! - சிம்ரன் ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments