Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'தெறி’ பேபியின் கொரோனா விழிப்புணர்வு வீடியோ: இணையத்தில் வைரல்

'தெறி’ பேபியின் கொரோனா விழிப்புணர்வு வீடியோ: இணையத்தில் வைரல்
, சனி, 4 ஏப்ரல் 2020 (08:14 IST)
'தெறி’ பேபியின் கொரோனா விழிப்புணர்வு வீடியோ
தளபதி விஜய் நடித்த ’தெறி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த நடிகை மீனாவின் மகள் நைனிகா சமூகவலைதளத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவரது தாயார் மீனாவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த வீடியோவில் நைனிகாவும் மீனாவும் மாறி மாறி கூறியதாவது: கொரோனா வைரஸ் காரணமாக அனைவரும் வீட்டிலேயே இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் என்று இருவரும் கூறியுள்ளனர். மேலும் இந்த வீடியோவில் மீனா மற்றும் நைனிகா ஆகிய இருவரும் வித்தியாசமான கெட்டப்பில் இந்த விழிப்புணர்வை கூறியது பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளை கவரும் வகையில் இருந்தது 
 
இந்த வீடியோவுடன் இருவரும் இணைந்தவாறு எடுக்கப்பட்ட ஒருசில புகைப்படங்களையும் நடிகை மீனா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவும் புகைப்படங்களும் தற்போது அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரல் ஆகி வருவதோடு மீனாவுக்கும் நைனிகாவுக்கும் நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரசிகர்களின் கோரிக்கையை ஏற்ற விஜய் டிவி... "லொள்ளு சபா" எப்போ? என்ன Time'க்கு தெரியுமா?