ஒருசில நடிகர்கள் இருக்கும் இடத்தில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது. தன்னை சுற்றி இருக்கும் இடத்தை கலகலப்பாக வைத்து கொள்வார்கள். ஆனால் அஜித் இருக்கும் இடத்தில் காமெடிக்கு சான்ஸே இல்லை என்றும் ஆனால் அவர் தன்னை சுற்றி இருப்பவர்களிடம் சகஜமாக பேசி அவர்களுடைய வாழ்க்கை முறையை தெரிந்து கொள்வார் என்றும் 'விவேகம்' படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்
அஜித் காலையில் படப்பிடிப்பிற்காக கேரவனில் இருந்து வெளியே வந்துவிட்டால் அவருடைய காட்சியின் படப்பிடிப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் மதிய உணவு நேரம் வரும் வரை மீண்டும் கேரவனுக்குள் செல்ல மாட்டார் என்றும் அங்கிருக்கும் கிரேன், லைட்மேன் போன்ற தொழிலாளிகளுடன் அவர்களுடைய வாழ்க்கை நிலைமைகளை கேட்டு தெரிந்து கொள்வார் என்றும் வெற்றி கூறியுள்ளார்.
அஜித்துடன் ஒரு படத்தில் பணிபுரிந்தேன் என்று கூறுவதை தான் பெருமையாக நினைப்பதாகவும், திரையுலகில் இதைவிட வேறு பெரிய அதிர்ஷ்டம் தனக்கு இல்லை என்றும் அவர் மேலும் கூறினார்.