Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒருவர் கூட மாற்றமில்லை: ‘தளபதி 67’ படம் குறித்த ஆச்சரிய தகவல்!

lokesh
, வியாழன், 23 ஜூன் 2022 (11:20 IST)
‘தளபதி 67’  படத்தில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் விக்ரம் படத்தில் பணிபுரிந்தவர் ஆக இருப்பார்கள் என்றும் விக்ரம் படத்தில் பணிபுரிந்தவர்கள் ஒருவர் கூட மாற்றமில்லாமல் ‘தளபதி 67’  படத்தில் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
 
தளபதி விஜய்யின் 66வது படமான வாரிசு படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவடைந்து விடும். அதன் பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 67’  படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
‘தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
விக்ரம் படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் ‘தளபதி 67’ படத்திலும் பணி புரிவார்கள் என்ற தகவல் விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடரும் சம்பள பாக்கி பிரச்சனை… திரைக்கதை ஆலோசகர் ‘கருந்தேள்’ ராஜேஷின் ஆதங்க பதிவு