Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“நகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு” - வைரமுத்து

Webdunia
புதன், 3 ஜனவரி 2018 (11:29 IST)
நகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு என தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார் வைரமுத்து.
கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “பொது வெளிகளில் என்னுடைய பேச்சிலும் பேட்டியிலும் நான் சொல்லாத செய்திகளைச் சொல்லியதாகப் பதிவிடுவதில் சில அன்பர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.  அது உண்மை என்று கருதிவிடும் அபாயமும் இருக்கிறது.
 
அதனால் என்னுடைய சுட்டுரைப் பக்கத்திலும் என் பெயரில் வெளிவரும் மெய்யான அறிக்கைகளிலும் தொலைக்காட்சியின் உண்மையான பதிவுகளிலும் நான் சொல்லியது மட்டுமே உண்மை என்று தமிழ் உலகம் நம்பும் என்று நம்புகிறேன். உண்மைக்கு  வெளியே தங்கள் வாக்கியங்களை என் வாக்கியங்களாக வெளியிட்டுக்கொள்ளும் நண்பர்கள் நகைச்சுவைக்காக அப்படிச்  செய்திருக்கக்கூடும். அவர்கள் மீது எனக்கு எந்த வகையிலும் வருத்தம் இல்லை. நகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு என்பதை அவர்களும் அறிவார்கள்; தமிழர்களும் புரிவார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற உடையில் ரித்திகா சிங்கின் க்யூட் க்ளிக்ஸ்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

“கேம்சேஞ்சர் கதை ஏன் ஹிட்டாகவில்லை என்று…” – கார்த்திக் சுப்பராஜ் பதில்!

சிம்புவுக்கு நான் எப்போதும் ‘நோ’ சொல்ல மாட்டேன்: STR 49 படத்தில் நடிப்பதை உறுதி செய்த சந்தானம்..!

வேட்டையன் படத்திற்கு பின் மீண்டும் ரஜினிகாந்த் - பகத் பாசில் கூட்டணி.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments