அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்திலிருந்து விலகிய முக்கிய பிரபலம்

Webdunia
புதன், 3 ஜனவரி 2018 (10:36 IST)
நடிகர் அஜித் மற்றும் இயக்குநர் சிவா கூட்டணி மீண்டும் இணையும் புதிய படத்திற்கு விஸ்வாசம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்குநர் சிவாவே இயக்குகிறார். இப்படத்தையும், சத்யஜோதி பிலிம் நிறுவனமே தயாரிக்கிறது. 
இந்நிலையில் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாக கூறப்பட்ட நிலையில், யுவன் விலகியிருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த படத்திற்கு இசையமைக்க அனிருத் மற்றும் சாம்.சி.எஸ் உடன் பேச்சுவார்த்தை  நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க இருப்பதாகவும், இந்த படத்தில் அஜித்  முற்றிலும் மாறுபட்ட இளமை தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். அஜித் ஜோடியாக நடிக்கும் கதாநாயகி தேர்வும் தீவிரமாக  நடந்து வருகிறது. அனுஷ்கா நடிக்கவே அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments