தமிழக முதல்வர் ஸ்டாலின் ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளா நிலையில் தியேட்டர்கள் திறக்க அனுமதியளிக்கப்பட்வில்லை .
தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 31 வரை தொடர்வதாக ஒரு சில கட்டுப்பாடுகளையும் தளர்வுகளை அவர் அறிவித்துள்ளார். திரையரங்குகள் நீச்சல் குளங்கள் பள்ளி கல்லூரிகளுக்கு தடை தொடரும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்
அதேபோல் தட்டச்சு சுருக்கெழுத்து மையங்கள், தொழிற்பயிற்சி மையங்கள் ஆகியவை இயங்கலாம் என்றும் 50 சதவீத மாணவர்கள் மற்றும் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே இருந்த தளர்வுகளான திருமண நிகழ்ச்சிக்கு 50 பேர்கள் இறுதி நிகழ்ச்சிக்கு 20 பேர்கள் மட்டுமே தொடரும் என்றும் அறிவித்துள்ளார்
திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் திரையரங்குகள் தற்போது திறப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரொனா தொற்று பாதிப்பு விகிதமும், உயிரிப்பு விகிதமும் குறைந்துவரும் நிலையில், விரையில் தியேடர்கள் திறக்கப்படுவதாகவும், அப்போது, முன்னணி நடிகர்கள் மற்றும் இளம் நடிகர்களின் படங்கள் ரிலீஸாவதாக கூறப்பட்ட நிலையில் அப்படங்கள் எல்லாம் ஓடிடி தளத்தில்தான் வெளியாகும் என தெரிகிறது.