நக்கலைட்ஸ் யுடியூப் சேனல்காரர்கள் தொடங்கிய சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் மூலமாக குடும்பஸ்தன் என்ற திரைப்படம் ஜனவரி மாதம் 24 ஆம் தேதி ரிலீஸாகி மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
குடும்பஸ்தன் படத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவரோடு முக்கியக் கதாபாத்திரங்களில் குரு சோமசுந்தரம் மேக்னா சான்வே கதாநாயகியாகவும், இயக்குனர் சுந்தர்ராஜன், குரு சோமசுந்தரம், தனம் அம்மா, பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், நிவேதிதா, அனிருத் ஆகியோர் குணச்சித்திரக் கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தார்கள். ராஜேஷ்வர் இயக்கியுள்ளார். வைசாக் இசையமைத்துள்ளார். இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.
இதையடுத்து குடும்பஸ்தன் இயக்குனர் ராஜேஸ்வர் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் மணிகண்டன் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படத்தையும் குடும்பஸ்தன் படத்தைத் தயாரித்த சினிமாக்காரன் நிறுவனமே தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.