Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காஜலுக்கு கிடைத்த திடீர் மவுசு

காஜலுக்கு கிடைத்த திடீர் மவுசு
, புதன், 15 மார்ச் 2017 (11:51 IST)
‘கைதி எண் 150’ படத்தின் வெற்றியால், தெலுங்கு சினிமாவில் காஜல் அகர்வாலுக்கு மவுசு கூடியுள்ளது. 

 
விஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படம் ‘கத்தி’. தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட்டான இந்தப் படம்,  தெலுங்கில் ‘கைதி எண் 150’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. சிரஞ்சீவியின் 151வது படமான இதில், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்திருந்தார். 
 
இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாக, காஜலை தங்கள் படங்களில் நடிக்கவைக்க தெலுங்கு சினிமா நடிகர்களும், இயக்குநர்களும் போட்டா போட்டி போடுகின்றனர். அஜீத் ஜோடியாக ‘விவேகம்’, விஜய் ஜோடியாக ‘விஜய் 61’ என தமிழ்ப் படங்களில் பிஸியாக இருக்கிறார் காஜல். அத்துடன், ராணா ஜோடியாக ‘நேனு ராஜு நேனு மந்த்ரி’ படத்திலும் நடித்து வருகிறார். இதனால், அடுத்த 4 மாதங்களுக்கு எந்தப் படத்துக்கும் கால்ஷீட் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அறப்போராட்டத்தில் ஆரி