Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 நாட்கள் திரைப்படங்கள் ஓடி வெற்றி விழா கொண்டாடும் நிலை மாறி 4 நாட்களிலேயே போட்ட காசை எடுக்கும் நிலை வந்துள்ளது- அசத்தலாக பேசிய முதலமைச்சர் ரங்கசாமி!

J.Durai
சனி, 5 அக்டோபர் 2024 (13:32 IST)
புதுச்சேரி அரசு சார்பில் இந்திய திரைப்பட விழா அலையன்ஸ் பிரான்சிஸ் அரங்கில் நடைபெற்றது. 5 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், இந்தி, வங்க மொழி திரைப்படங்கள் திரையிடபடுகின்றன
 
இன்று நடைபெற்ற துவக்க விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லஷ்மிநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தனர். தொடர்ந்து 2023ம் ஆண்டின் புதுச்சேரி அரசின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்ய பட்ட குரங்கு பெடல் படத்தின் இயக்குனர் கமலக்கண்ணனுக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருதும், ஒரு லட்சத்தை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கி கவுரவித்தார். 
 
தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி.....
 
திரைப்படங்கள் மக்களின் வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாக உள்ளது உள்ளது, 
ஒரு சில படங்களின் கருத்துகள் மனித வாழ்வுக்கு உகந்ததாக உள்ளதால் அவை சிறந்த படமாக அமைகிறது, 
திரைப்படங்கள் மூலம் பல்வேறு தலைவர்கள் வந்துள்ளனர், மக்களின் அன்றாட வாழ்க்கையை திரைப்படமாக எடுப்பது மிக கடினம் அப்படி ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே வருகின்றன, அப்படி நல்ல கதையை தேர்வு செய்து அதனை இயக்கி அனைவரது பாராட்டுகளையும் இயக்குனர் பெற்றுள்ளார். 
 
அவர் மேலும் மேலும் சிறந்த திரைப்படங்களை இயக்க வேண்டும் என்றார் அதுமட்டுமின்றி பெயரை தெரியாத படங்கள் மட்டுமே விருதுகள் பெறுகின்றது ஏனென்றால் அது மக்களின் நலன் சார்ந்த கருத்துக்களை உள்ளடக்கிய படமாக உள்ளது மேலும் 50 முதல் 100 நாட்கள் வரை ஓடி வெற்றி விழா கொண்டாடும் நிலை மாறி நான்கு நாட்களிலேயே போட்ட பணத்தை வசூல் செய்யும் நிலை மாறி உள்ளது மேலும்  தனது ஆசிரியரின் சைக்கிளை துடைப்பதாக கூறிவிட்டு அவருக்கே தெரியாமல் அவரை ஏமாற்றி அவரது சைக்கிளில் குரங்கு பெடல் போட்ட அனுபவம் எனக்கு உண்டு அப்பொழுதெல்லாம் சைக்கிள் வாங்குவதற்கும் அதனை பாதுகாப்பாக பூட்டு போட்டு வைத்திருந்தனர் ஆனால் தற்பொழுது மோட்டார் சைக்கிள் இரண்டு லட்சம் மூன்று லட்சம் என்று கூறுகிறார்கள் ஆனால் அதனை தெருவோரம் நிறுத்திவிட்டு அச்சம் இல்லாமல் இருக்கின்றனர் அது திருட்டு பயம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் எனது கார் செல்லும்  தெருக்களில் கூட ஒரு வீட்டிற்கு நான்கு மோட்டார் சைக்கிள் உள்ளது அதனை ஒழுங்காக கூட நிறுத்தாமல் அசால்டாக இருக்கிறார்கள் அது வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது என்பதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று  தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் முகேஷ் மீது பாலியல் புகார் அளித்த நடிகை.. திடீரென வாபஸ் பெற்றதால் பரபரப்பு..!

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட ஆர்ஜே பாலாஜி.. என்ன காரணம்?

என் தந்தை ஒரு லெஜெண்ட்; பொய்யான தகவல்களை பகிர்வதை தவிர்க்கவும்.. ஏஆர்.ரஹ்மான் மகன்

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

மாடர்ன் உடையில் மிரட்டும் போஸ்களில் ரைஸா வில்சன்!

அடுத்த கட்டுரையில்
Show comments