Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாணவர்கள் கவனத்திற்கு..! அரசு பள்ளிகள் நேரம் மாற்றி அமைப்பு.!!

Advertiesment
Students

Senthil Velan

, சனி, 3 ஆகஸ்ட் 2024 (10:44 IST)
புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும் காலை 9 மணிக்கு பதிலாக 9.15 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும் காலை 9 மணி முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது புதுச்சேரி பள்ளி கல்வி துறை வெளியிட்டுள்ள புதிய அட்டவணைப்படி, அனைத்து  அரசு பள்ளிகளும் காலை 9.15 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
காலை 9.15மணி முதல் 9.30 வரை வழிபாடு நடைபெறும். காலை 9.30 மணி மதியம் 12.25 வரை மூன்று பாடவேளை நடைபெறும். காலை 11 மணி முதல் 11.10 மணி வரை இடைவேளை. 

 
மதிய உணவு இடைவேளை 12.40 மணி முதல் 1.30 மணி வரை இருக்கும். மதியம் 1.30 மணி முதல் மாலை 4.20 வரை 4 பாடவேளை நடைபெறும் என்றும் இந்த அறிவிப்பு ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றும் புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேற்று உயர்ந்த தங்கம் இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?