டகால்டி படத்தின் போஸ்டர்களில் சந்தானம் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளில் நடித்திருப்பதற்கு அன்புமணி கண்டனம் தெரிவிக்காததற்குக் காரணம் பின்னணி பற்றி சமூக வலைதளங்களில் சலசலப்புகள் எழுந்துள்ளன.
ரஜினி, அஜித், விஜய் ஆகியக் கதாநாயகர்கள் தங்கள் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடித்தாலோ அல்லது அதுபோன்ற போஸ்டர்களை வெளியிட்டாலோ முதல் ஆளாக கண்டனம் தெரிவிப்பர் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ். இதனால் நடிகர்களின் ரசிகர்களுக்கும் பாமக வினருக்கும் இடையில் பலமுறை வாக்கு மோதல்கள் எழுந்துள்ளன.
ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சந்தானம் நடித்த 'டகால்டி' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் அவர் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்த போதும் அதற்கு அன்புமணியோ பாமக வினரினோ எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பது சர்ச்சைக்குள்ளானது. இதற்குக் காரணம் அன்புமணியும் சந்தானமும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் என சமூக வலைதளங்களில் புகைச்சல் கிளம்பியுள்ளது. மேலும் இதைக் கேலி செய்வது போல விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசும் அன்புமணியைக் கிண்டல் செய்யும் விதமாக சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.