Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் வடிவேலு- ஷங்கர் இடையேயான பிரச்சனை முடிந்தது !

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (17:06 IST)
நடிகர் வடிவேலுக்கும் , ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை  முடிவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வடிவேலு சிம்புதேவன் காம்போவின் ஹிட் காம்போவான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டனர். படத்தின் போஸ்டர் வெளியாகி சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஆனால் வடிவேலுவுக்கும், இயக்குனர் ஷங்கரின்  எஸ்.பிக்சர்ஸ்க்கும்  இடையே ஏற்பட்ட பிரச்சனையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு ஒரு கட்டத்தில் படமும் கைவிடப்பட்டது. இதனால் லைகா நிறுவனத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு வடிவேலு ஈடு செய்யவேண்டும் என்று அவருக்கு ரெட் விதிக்கப்பட்டது.

 
இந்நிலையில் நடிகர் வடிவேலுக்கும், இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் இடையிலான பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதாகத் தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது.


இது வடிவேலுவின் ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அ அவர் ஓடிடியில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதாகக் கூறப்படும் நிலையில் அவருக்கான தடை முடிந்தால் அவரது இரண்டாவது இன்னிங்ஸ் சினிமாவில் வெற்றிகரமான அமையும் என அவரது ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.விரைவில் இப்படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தயாரிப்பாளரகள் சங்கத்தில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹரிஷ் கல்யாணின் அந்த படத்தைப் பார்த்த இயக்குனர் வெற்றிமாறன்..! என்ன சொன்னார் தெரியுமா?

தொடங்கியது ‘டிமாண்டி காலனி 3’ படத்தின் வேலைகள்… ரிலீஸ் எப்போது?

கார்த்திக்கு வில்லன் ஆகும் நிவின் பாலி… எந்த படத்தில் தெரியுமா?

முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?... சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்!

மணிகண்டன் இயக்கும் படத்தைத் தயாரிக்கிறோம்- பிரபல இயக்குனர்கள் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments