இந்தியன் -2வில் கமலுடன் இணைந்த பிரபல நடிகர்

வியாழன், 8 நவம்பர் 2018 (14:39 IST)
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த “இந்தியன் ” திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டவது பாகம் தற்போது உருவாக உள்ளது. தற்போது இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
22 வருடங்களுக்குப் பிறகு ‘இந்தியன்’ - 2 உருவாக இருக்கிறது. இயக்குனர் ‌ஷங்கர் தற்போது ‘2.0’ படத்தின் ரிலீஸ் வேலைகளில் பிசியாக இருப்பதால் அதன் ரிலீசுக்குப் பிறகு இந்தியன் -2 வேலையை தொடங்க இருக்கிறார். 
 
இந்த படத்தில் காஜல் அகர்வால் கமலுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். பாலிவுட் நடிகர் அக்‌‌ஷய் குமார் வில்லனாக நடிக்கலாம் என்ற செய்தி எதிரொலிக்கிறது . 
 
இந்நிலையில் கமலின் இந்தியன்-2 படத்தில் மம்முட்டியின் மகனும், பிரபல நடிகருமான துல்கர் சல்மான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மலையாள நடிகரான இவர்  ஏற்கனவே தமிழில், ‘வாயை மூடி பேசவும்’ என்ற படம் மூலம் அறிமுகமானார். 
 
இவர் நடிப்பில் வெளிவந்து வெற்றிநடைபோட்ட  ‘ஓ காதல் கண்மணி’, ‘சோலோ’, ‘நடிகையர் திலகம்’ போன்ற மெகா ஹிட் வரிசையில் இந்தியன் - 2  படத்தையும் எதிர்பார்க்கலாம் என்கிறது சினிமா வட்டாரங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

LOADING