Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவாஜி வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவு ரத்து! - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Prasanth Karthick
திங்கள், 21 ஏப்ரல் 2025 (11:49 IST)

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய இடப்பட்டிருந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

 

நடிகர் சிவாஜியின் ‘அன்னை இல்லம்’ வீடு சென்னை தி.நகரில் உள்ள நிலையில், அவரது பேரன் துஷ்யந்த் திரைப்பட தயாரிப்புக்காக ரூ.3.75 கோடி கடன் பெற்று அது வட்டியுடன் ரூ.9.40 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால் அவர் கடனும், வட்டியும் கட்டாததால் சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிடப்பட்டது.

 

இதை எதிர்த்து சிவாஜியின் இளைய மகனும், நடிகருமான பிரபு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது அண்ணன் ராம்குமாரின் மகன் துஷ்யந்தின் கடனுக்கு அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய முடியாது என்றும், அன்னை இல்லம் தன்னுடைய உரிமையான சொத்து என்றும் வாதிட்டார். 

 

பிரபுவின் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அன்னை இல்லம் பிரபுவின் சொத்து என்பதாலும், அதில் துஷ்யந்திற்கு எந்த பங்கும் இல்லை என்பதாலும் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தொலைஞ்சது சனியன்.. சூப்பர் சிங்கரை விட்டு வெளியேறிய பிரியங்கா குறித்து நெட்டிசன்கள் ரியாக்சன்..!

‘ரெட்ரோ’ சூர்யாவுகாக எழுதிய கதை இல்லை: மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்..!

40 கல்யாணம் கூட பண்ணுவேன், ஆனால் இன்னும் 4ஐ கூட தொடலை.. வனிதா விஜயகுமார்..!

எதிர்பார்ப்புகளை உருவாக்கிய சூர்யாவின் ‘ரெட்ரோ’… முன்பதிவு தேதி அறிவிப்பு!

ஹீரோவாக அறிமுகம் ஆகும் ‘ஸ்டார்’ பட இயக்குனர் இளன்!

அடுத்த கட்டுரையில்
Show comments