Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இயக்குனர் விக்ரமனின் மனைவியை நேரில் சந்தித்த அமைச்சர்

Advertiesment
vikraman-jeyapriya
, திங்கள், 30 அக்டோபர் 2023 (12:45 IST)
இயக்குனர் விக்ரமனின் மனைவியை 25க்கும் மேற்பட்ட மருத்துவர்களுடன்  நேரில் சென்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்து, நல்ல சிகிச்சை அளிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் 90 களில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் விக்ரமன். இவர்,   
மணிவண்ணனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். அதன்பின்னர்,1990 ஆம் ஆண்டு  புது வசந்தம் என்ற படம் மூலம் இயக்குனரானார். விஜய்யின் பூவே உனக்காக, உன்னை நினைத்து, வானத்தைப் போல, சூரிய வம்சம் உள்ளிட்ட பல  ஹிட் படங்களை இயக்கியிருந்தார்.

இயக்குனர் விக்ரமனின் மனைவியும் நடனக் கலைஞருமான ஜெயப்பிரியா தனியார் மருத்துவமனையில் முதுகில் செய்த தவறான அறுவைச் சிகிச்சையால் பாதிக்கப்பட்டு, கடந்த 5 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக கால்கலை அசைக்க முடியாமல் உள்ளார்.

இதுகுறித்து சமீபத்தில், விக்ரமன் மற்றும் அவரது மனைவி இருவரும் பேட்டியளித்தனர்.
இந்த நிலையில், இன்று இயக்குனர் விக்ரமனின் மனைவியை 25க்கும் மேற்பட்ட மருத்துவர்களுடன்  நேரில் சென்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்து, நல்ல சிகிச்சை அளிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

விக்ரமனின் பேட்டியைப் பார்த்து முதல்வர் மு.க.ஸ்டாலின்   இப்பிரச்சனையை சுகாதாரத்துறையின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக தகவல் வெளியாகிறது.
 

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனிமேல் திரைப்படங்கள் இயக்க மாட்டேன்.. இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அதிர்ச்சி அறிவிப்பு..!