Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உருவ கேலிகளுக்கு பதிலளிக்க பேஷியல் சிகிச்சை செய்துகொள்ளும் லெஜண்ட் அண்ணாச்சி!

உருவ கேலிகளுக்கு பதிலளிக்க பேஷியல் சிகிச்சை செய்துகொள்ளும் லெஜண்ட் அண்ணாச்சி!
, வியாழன், 4 ஜனவரி 2024 (08:45 IST)
சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் நடித்த தி லெஜன்ட் என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் ஓரளவு பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த திரைப்படம் கடந்த சில மாதங்களாக ஓடிடியில் ரிலீஸ் ஆகி வரவேற்பையும் கேலி கிண்டலையும் பெற்றது. இந்நிலையில் இப்போது தன்னுடைய க்ளின் ஷேவ் கெட்டப்பை மாற்றி தாடி மீசையுடன் அடுத்த படத்துக்கு தயாராகி வருகிறார் சரவணன். அடுத்து அவர் எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் முதல் படத்தில் லெஜண்ட் சரவணனின் உருவத் தோற்றம் கேலிகளுக்கு ஆளான நிலையில் அது மீண்டும் நடக்கக் கூடாது என்பதற்காக நடிகர்கள் முகத்தை இளமையாக காட்ட மேற்கொள்ளும் பேஷியல் சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறாராம். விரைவில் புதுப்பொலிவுடன் தன்னுடைய இரண்டாவது படத்தை தொடங்குவார் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேப்டன் மில்லர் படத்தின் தமிழக திரையரங்க விநியோக உரிமை நிலவரம்!