Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அருள் சரவணன் நடிக்கும் ‘தி லெஜண்ட்’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

அருள் சரவணன் நடிக்கும் ‘தி லெஜண்ட்’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
, புதன், 6 ஜூலை 2022 (15:45 IST)
பிரம்மாண்டமாக உருவாகியுள்ள தி லெஜண்ட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கபப்ட்டுள்ளது.

சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் மற்றும் ஊர்வசி ரெளட்டாலா நடிப்பில் உருவான திரைப்படம் தி லெஜன்ட். ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 100 கோடிக்கும் அதிகமாக செலவு செய்து பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை பிரபல தயாரிப்பாளரும் பைனான்சியருமான அன்புச்செழியன் கைப்பற்றி ரிலீஸ் செய்ய உள்ளது. இந்நிலையில் படம் ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் இணைகிறதா அஞ்சான் கூட்டணி? சூர்யா கொடுத்த நம்பிக்கை!