Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தி லெஜண்ட் படத்துக்கு இவ்வளவா பில்ட் அப்பா? உலகம் முழுவதும் 2500 திரைகளில் ரிலீஸ்!

தி லெஜண்ட் படத்துக்கு இவ்வளவா பில்ட் அப்பா? உலகம் முழுவதும் 2500 திரைகளில் ரிலீஸ்!
, வெள்ளி, 22 ஜூலை 2022 (15:32 IST)
தி லெஜண்ட் திரைப்படம் உலகம் முழுவதும் 2500 திரைகளில் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.

சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் மற்றும் ஊர்வசி ரெளட்டாலா நடிப்பில் உருவான திரைப்படம் தி லெஜன்ட். ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகிறது.

பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை பிரபல தயாரிப்பாளரும் பைனான்சியருமான அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றி ரிலீஸ் செய்ய உள்ளது. இந்நிலையில் படம் ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேன் இந்தியா ரிலீஸாக 5 மொழிகளில் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் 2500 திரைகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் 800 திரைகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு இணையாக அண்ணாச்சியின் படம் ரிலீஸ் ஆவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமலின் விக்ரம் படம் புதிய சாதனை...