Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மற்ற மொழிகளில் ப்ரமோஷனைத் தொடங்கிய ‘தி லெஜண்ட்’ படக்குழு… மலையாள டிரைலர் ரிலீஸ் தகவல்!

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (10:44 IST)
சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் லெஜண்ட் சரவணன் நடித்துள்ள தி லெஜண்ட் திரைப்படம் வரும் ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் மற்றும் ஊர்வசி ரெளட்டாலா நடிப்பில் உருவான திரைப்படம் தி லெஜன்ட். ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 100 கோடிக்கும் அதிகமாக செலவு செய்து பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை பிரபல தயாரிப்பாளரும் பைனான்சியருமான அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றி ரிலீஸ் செய்ய உள்ளது. இந்நிலையில் படம் ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்களுக்கு இணையாக சுமார் 800 திரையரங்குகளில் தமிழ்நாட்டில் மட்டும் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் பிற மொழிகளுக்கான ப்ரமோஷன்கள் தற்போது தொடங்கியுள்ளன. தி லெஜண்ட் என்ற பெயரிலேயே மலையாளத்தில் ரிலீஸ் ஆகும் இந்த படத்தின் மலையாள டிரைலர் நாளை மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Think Music India (@thinkmusicofficial)

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments