Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 5 April 2025
webdunia

சினிமாட்டிக் யூனிவர்ஸ் கதைகளில் உடன்பாடு இல்லை… இயக்குனர் ஹரி சொன்ன காரணம்!

Advertiesment
அருண் விஜய்
, திங்கள், 11 ஜூலை 2022 (14:39 IST)
இயக்குனர் ஹரி சமீபத்தில் வெளியான ‘யானை’ படத்தின் வெற்றியால் மீண்டும் கமர்ஷியல் இயக்குனராகியுள்ளார்.

தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவரான ஹரி இயக்கிய யானை திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூலை 1 ஆம் தேதி ரிலீஸானது. இதுவரை அருண் விஜய்யின் படங்கள் ரிலீஸ் ஆகாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது.

முதல்வாரத்தில் பல இடங்களில் ஹவுஸ் புல்லாக ஓடிய யானை திரைப்படம் நான்கு நாட்களில் சுமார் 12 கோடி வரை தமிழ் நாட்டில் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. விக்ரம் ரிலீஸூக்குப் பின்னர் எந்தவொரு தமிழ்ப் படமும் பெரிதாக வசூல் செய்யாத நிலையில் யானை திரைபடம் நல்ல வசூலைக் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  தற்போது இரண்டாவது வாரத்திலும் ஹவுஸ் புல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் தற்போது ஹரி அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் தனக்கு சினிமாட்டிக் யுனிவர்ஸ் போன்ற கதைக்களத்தில் உடன்பாடு இல்லை என்று கூறியுள்ளார். மேலும் “சினிமா என்றால் நேராக கதைதான். படம் முடிந்ததும்தான் ரசிகன் அதற்குள் இருந்து வெளியே வரவேண்டும். படம் பார்க்கும்போதே சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்றால் அதில் எனக்கு உடன்பாடு இல்லை” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘தி லெஜண்ட்’ படத்தின் வெளிநாட்டு உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்