Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

“இவர்தான் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் “ லெஜண்ட் அண்ணாச்சியை கலாய்த்த நடிகை!

“இவர்தான் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் “ லெஜண்ட் அண்ணாச்சியை கலாய்த்த நடிகை!
, புதன், 27 ஜூலை 2022 (11:02 IST)
லெஜண்ட் சரவணன் நடித்துள்ள ‘தி லெஜண்ட்’ திரைப்படம் 5 மொழிகளில் பேன் இந்தியா ரிலீஸாக வெளியாக உள்ளது.

சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் மற்றும் ஊர்வசி ரெளட்டாலா நடிப்பில் உருவான திரைப்படம் தி லெஜன்ட். ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகிறது.

பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை பிரபல தயாரிப்பாளரும் பைனான்சியருமான அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றி ரிலீஸ் செய்ய உள்ளது. இந்நிலையில் படம் ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தி வெளியீட்டுக்காக படத்தின் ப்ரஸ் மீட் மும்பையில் நடந்துள்ளது. அதில் சரவணன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பதிலளித்தார் சரவணன். அதன் பின்னர் பேசிய நாயகி ஊர்வசி “தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் சரவணன்” எனக் கூறி நகைச்சுவையாக பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லோகேஷ் கனகராஜுக்கு விருந்து வைத்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி!