Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

“கடைசி உலகப்போர்” திரைப்பட   முன் வெளியீட்டு நிகழ்ச்சி!!

“கடைசி உலகப்போர்” திரைப்பட   முன் வெளியீட்டு நிகழ்ச்சி!!

J.Durai

, வியாழன், 12 செப்டம்பர் 2024 (08:57 IST)
ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில், ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, தயாரித்து, இயக்கி இசையமைத்திருக்கும் புதிய திரைப்படம் "கடைசி உலகப்போர்".  மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பாக உருவாகியுள்ளது இப்படம். 
 
ராப் பாடகராக அறிமுகமாகி மக்கள் மனதில் இடம்பிடித்து, இசையமைப்பாளராக, நடிகராக, இயக்குநராகப் புகழ் பெற்றிருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். 
 
இப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. 
 
இந்நிகழ்வினில்
இயக்குநர் சுந்தர் சி பேசியதாவது…....
 
என்னோட மகள் கல்லூரியில் புதிதாக அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்கிறார், அதை என் மனைவி வீடியோ எடுத்து அனுப்பி வைத்தார். அதைப்பார்த்த போது, எனக்குக் கண்ணீர் வந்தது. அதே போல் தான் என் தம்பிகளைப் பார்க்கும்போதும் வருகிறது. என்னிடம் வெறும் தன்னம்பிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு வந்து, இன்று தயாரிப்பு நிறுவனம் வரை வளர்ந்து  வந்திருப்பது மகிழ்ச்சி. ஆதியை மட்டும் தான் நான் அறிமுகப்படுத்தினேன், ஆனால் அவர் பல பேரை அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் படத்தை அறிமுகப்படுத்தும் வாய்ப்பை எனக்குத் தருமளவு, என் மீது அவர்கள் வைத்துள்ள மரியாதைக்கு நன்றி. இன்னும் மென்மேலும் வளர என் வாழ்த்துகள். 
 
நடிகர் நட்டி (எ) நட்ராஜ் பேசியதாவது......
 
இந்தப்படத்தில் என் பெயரிலேயே நடித்திருக்கிறேன். நானும் சுந்தர் சி குடும்பத்திலிருந்து வந்தவன் தான். ஹிப் ஹாப் ஆதியைப் பார்த்து மிக மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப்படத்தின் கதையைக் கேட்டுப் பிரமித்துவிட்டேன், இந்த வயதில், இப்படி ஒரு கதை எழுதி, எடுப்பது சாதாரணமல்ல, படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். அனைவருக்கும் வாழ்த்துகள். 
 
நடிகர் தலைவாசல் விஜய் பேசியதாவது…...
 
மூன்று நாள் தான் நடித்தேன். இந்தப்படத்தின் டிரெய்லர் பார்க்கும் போது, பிரமிப்பாக இருக்கிறது. இந்த டீம் அத்தனை தெளிவாக இருக்கிறார்கள். இந்தப்படம் பார்க்கும் போது  நம் பார்லிமெண்ட் ஞாபகம் வரும். படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள். 
 
இயக்குநர், நடிகர் அழகம் பெருமாள் பேசியதாவது…...
 
புதுப்பேட்டைக்குப் பிறகு எனக்கு அமைந்த மிகச்சிறந்த படமென இதைச் சொல்வேன். எல்லோருமே புதுப்பேட்டை மாதிரி ஒரு படம் வரவில்லையே எனக்கேட்பார்கள், அவர்களுக்கான பதில் தான் இந்தப்படம். புலிப்பாண்டி எனும் பாத்திரத்தில் நடித்துள்ளேன். புதுப்பேட்டையிலிருந்து, மாறுபட்ட வித்தியாசமான அரசியல்வாதியாக இருக்கும். இந்த மாதிரி படம் தமிழ் சினிமாவில் வந்ததே இல்லை. நிச்சயம் ஒரு கல்ட் சினிமாவாக இப்படம் இருக்கும். ஆதியைப் பார்த்துப் பிரமிப்பு வருகிறது. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவரது அண்ணனாக என்னையும் ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சி. இந்தக்குழு அத்தனை நுணுக்கமாக அயராத உழைப்பைத் தந்துள்ளனர். என் உடன் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி.
 
நடிகர் சிங்கம்புலி பேசியதாவது…...
 
ஹிப் ஹாப் ஆதியை முதன் முதலில் சுந்தர் சி சாருடன் தான் பார்த்தேன், உங்களை மிகவும் பிடிக்கும், என் முதல் படத்திலிருந்து உங்களை என் படத்தில் நடிக்க வைக்க வேண்டுமென ஆசைப்பட்டேன் என்றார். இந்தப்படத்தில் நீங்கள் இருக்க வேண்டும் என்றார். இந்தப்படத்தில் நடிக்கும் போது அத்தனை அக்கறையாகப் பார்த்துக்கொண்டார். ஒரு கமர்ஷியல் படத்தை எடுப்பதை விட்டுவிட்டு, கடைசி உலகப்போர் என ஒரு அழுத்தமான படத்தை எடுக்கும் அவரது மனதுக்கு வாழ்த்துகள். பொள்ளாச்சியில் ஷூட்டிங் நடக்கும் போது, ஆதிக்கு அம்மை வந்துவிட்டது ஆனாலும் ஷூட்டிங் வர்றேன் என்றார். ஆனால் நான் தான் அவரை சமாதானப்படுத்தி ஓய்வெடுக்க வைத்தேன்.  அவரது அர்ப்பணிப்பிற்கும் உழைப்பிற்கும் வாழ்த்துகள்.
 
நடிகர் ஹரீஷ் உத்தமன் பேசியதாவது…..
 
ஹிப்ஹாப் ஆதி சினிமாவுக்கு வந்ததிலிருந்து, அவர் செய்த ஒவ்வொரு விசயத்திலும், ஏதாவது ஒரு நல்ல விசயத்தை சொல்லுணும் என்று தான் செய்வார். இந்தப்படத்தில் நடிக்கும் முன், இப்படத்தில் ஃப்ரீ விஷுவல் காட்டினார் அதுவே எனக்குப் பிரமிப்பைத் தந்தது. அவர் எப்படி தான் இவ்வளவு வேலை செய்கிறார் எனத் தெரியவில்லை, இந்தப்படத்தில் பிரக்யோக் சிங் எனும் கேரக்டர் செய்துள்ளேன், தனி ஒருவனுக்குப் பிறகு மீண்டும் ஒரு சிங் கேரக்டர், பிஸிகலாக சவாலான கேரக்டர், உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். இன்று ஹிப் ஹாப் தமிழா ஒரு பிராண்ட் என்பதை விட, ஒரு மூவ்மெண்ட் என்பதாகத் தான் பார்க்கிறேன். இளைஞர்கள் அவரை பின் தொடர்கிறார்கள். ஜீவாவும் ஆதியும் எனக்கும் பலருக்கும் இன்ஸ்பிரேஷன் வாழ்த்துகள். 
 
நடிகர் சாரா பேசியதாவது…...
 
கடைசி உலகப் போர். ஆதி ப்ரோ இயக்கி நான் ஹீரோவாக நடிச்சிருக்க படம், நான் இங்கு நிற்க காரணம் மூன்று பேர். என்னை அறிமுகப்படுத்திய லோகேஷ் கனகராஜ், என்னை உலகம் அறிய வைத்த ஆதி, என்னை பயன்படுத்தச் சொன்ன சுந்தர் அண்ணா மூவருக்கும் நன்றி. ஆதியுடன் வேலை பார்ப்பது அவ்வளவு எளிதாக இருக்கும், மிக ஃபிரண்ட்லியாக இருப்பார். சித்தர் ஜீவா ஆசையே இல்லாத மனிதனாக என்னைப் பிரமிக்க வைக்கிறார். எனக்கு இது மிக முக்கியமான படமாக இருக்கும். அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி. 
 
நடிகை அனகா பேசியதாவது…...
 
ஆதி உடன் இரண்டாவது படம், கதையே மிக வித்தியாசமாக இருந்தது, நடிக்கக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது, ஆதி தைரியம் தந்தார். மிக அழுத்தமான படம். மிகப்பெரிய நடிகர்கள் நடித்துள்ளார்கள், ஆதி மிகச்சிறப்பாக இயக்கியுள்ளார். நான் இதுவரை செய்யாத மிக வித்தியாசமான ரோல், படக்குழுவினரின் ஒத்துழைப்பில் ரொம்ப ஈஸியாக நடித்தேன். எல்லோருக்கும் நன்றி. ஜீவா முதல் படக்குழு அனைவருக்கும் நன்றிகள். இந்தப்படம் மிக மிக வித்தியாசமான படமாக இருக்கும் நன்றி. 
 
ஹிப் ஹாப் தமிழா ஆதி பேசியதாவது…...
 
என்னை அறிமுகம் செய்த சுந்தர் சி அண்ணா இங்கு வந்து எங்களை வாழ்த்தியது மகிழ்ச்சி. நட்டி சாருக்கு இப்படத்தில் மிக முக்கியமான ரோல், மிக சூப்பராக நடித்திருக்கிறார். சிங்கம் புலி அண்ணாவும் சிறப்பாக நடித்துள்ளார். சாரா, அனகா, அழகம்பெருமாள் என நிறையப் பேர் நடித்துள்ளார்கள். விஜயன் எனும் ஒரு துணை நடிகரை வில்லனாக நடிக்க வைத்துள்ளோம். அவர் கண்டிப்பாகப் பெரிய நடிகராக வருவார். இந்தப்படம் மற்ற படங்களிலிருந்து புதிதாக இருக்கும்.  இப்படி ஒரு படத்தை எடுக்க மிக முக்கிய காரணம் தொழில்நுட்ப கலைஞர்கள் தான், அனைவருக்கும் என் நன்றிகள். அர்ஜூன் மிக அட்டகாசமான விஷுவலை தந்துள்ளார். ஏகப்பட்ட செட் ஒர்க், வார் சீக்வன்ஸ் செய்துள்ளோம். நாகு சார் அட்டகாசமாக வேலை பார்த்துள்ளார். எடிட்டர் பிரதீப் அற்புதமாக எடிட் செய்துள்ளார். எங்கள் டீம் தான் மொத்த வேலையும் செய்துள்ளோம். ஜீவா தான் விஷுவல் எஃபெக்ட்ஸ் செய்துள்ளார். தயாரித்த அனுபவமே புதிது தான். ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே! எனும் சித்தர் வாக்கு தான் இந்தப்படத்தின் அடிப்படை, நாம் சண்டையிட்டுக்கொண்டால் உலகம் அழிந்து போய் விடும் என்பது தான் இப்படம். ரசிகர்களுக்குக் கண்டிப்பாக புதிய அனுபவமாக இருக்கும் என்றார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோட் படத்தை பார்த்த விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன்!