Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகுபலி-2 படத்தை பார்க்காத ஊழியரை டிஸ்மிஸ் செய்த முதலாளி....

Advertiesment
பாகுபலி-2 படத்தை பார்க்காத ஊழியரை டிஸ்மிஸ் செய்த முதலாளி....
, வெள்ளி, 5 மே 2017 (16:10 IST)
ஹைதரபாத்தில் பாகுபலி2 படத்தை பார்க்காத ஒரு ஊழியரை, அவரின் முதலாளி, வேலையிலிருந்து நீக்கி விட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.


 

 
இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் பாகுபலி2 படம் கடந்த  மாதம் 28ம் தேதி வெளியானது. என்னதான் மற்ற மொழிகளில் இது மொழி மாற்றம் செய்யப்பட்டிருந்தாலும், அந்த படம் தெலுங்கு மொழியில்தான் படமாக்கப்பட்டிருந்தது. ஆந்திராவின் முக்கிய நகரமான ஹைதராபாத்தில் 2 தியேட்டர்களை தவிர மற்ற அனைத்து தியேட்டர்களிலும் இந்தப்படமே திரையிடப்பட்டது.  எனவே, ஆந்திர மாநிலத்தில் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
 
சில நிறுவனங்கள் இந்த படத்தை பார்ப்பதற்காக தங்களின் ஊழியர்களுக்கு விடுமுறையும் அளித்தன. அதனால், படம் வெளியான முதல் நாளே இப்படம் ஆந்திராவில் ரூ.50 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் இந்தப்படத்தை பார்க்காத ஊழியர் ஒருவரை ஒரு நிர்வாகம் வேலையிலிருந்து நீக்க சம்பவம் ஆந்திராவில்  நடந்துள்ளது.
 
பாகுபலி2 படத்தை பற்றி அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் அமர்ந்து பேசுக்கொண்டிருந்தனர். அதில் மகேஷ்பாபு என்கிற இளைஞர் படத்தின் காட்சிகள் பற்றி தப்பு தப்பாக கூறியிருக்கிறார். இதை பார்த்த அந்த நிறுவனத்தின் உரிமையாளர், மகேஷ்பாபு படத்தை பார்க்கவில்லை என்பதை தெரிந்துகொண்டார். 
 
பாகுபலி2 படத்தை பார்க்க விடுமுறை அளித்தும், இவர் படம் பார்க்காமல் நம்மை ஏமாற்றியிருக்கிறார் என கோபமடைந்த அவர், மகேஷ்பாபுவிடம் விளக்கம் கேட்டிருக்கிறார். ஆனால், அவரின் விளக்கத்தில் திருப்தியடையாத உரிமையாளர், அவரை வேலையிலிருந்து நீக்கி விட்டாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லிப் டூ லிப் காட்சிக்காக நடிகையிடம் கையெழுத்து வாங்கிய இயக்குநர்