Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலவச புரமோஷன் எதிரொலி: 37 நாடுகளில் நாளை வெளியாகிறது ‘தி கேரளா ஸ்டோரி’

இலவச புரமோஷன் எதிரொலி:  37 நாடுகளில் நாளை வெளியாகிறது ‘தி கேரளா ஸ்டோரி’
, வியாழன், 11 மே 2023 (15:22 IST)
‘தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதில் அந்த படத்திற்கு இலவச ப்ரமோஷன் கிடைத்துள்ளது. இதனை அடுத்து இந்த படத்திற்கு வட மாநிலங்களில் பெரும் வரவேற்பு கிடைத்ததை எடுத்து நாளை முதல் 37 நாடுகளில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 
 
பிரதமர் மோடி இந்த படத்தை பற்றி பெருமையாக பேசியது பல நாடுகளில் உள்ள ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வெளியானது. இதனை அடுத்து இந்த படத்தை 37க்கும் மேற்பட்ட நாடுகளில் நாளை வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது என இந்த படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். 
 
இந்த படம் தமிழகம் மற்றும் மேற்குவங்கம் தவிர அனைத்து மாநிலங்களிலும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் ஓடியது என்பதும் கேரளாவில் இந்த படத்துக்கு எதிர்ப்பு இருந்தாலும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விருது விழாவுக்கு இப்படியா வருவது? முகம் சுளிக்க வைத்த ரஜினி பட நடிகை!