Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதன்முறையாக குடும்ப பெண்களின் குரூப் புகைப்படத்தை வெளியிட்ட ஜெயம் ரவி.!

Webdunia
திங்கள், 18 மார்ச் 2019 (13:17 IST)
சினிமா பின்ணணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்து  தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி,  தமிழில் வெளியான "ஜெயம்" படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி இதுவரை பல்வேறு ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.  

அந்தவகையில் இவரது நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகி இன்றுவரை மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் சன் ஆஃப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்ரமணியம் , நிமிர்ந்து நில், தனி ஓருவன் போன்ற தரமான படங்களில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். 
 
ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா பிரபல இயக்குனர் என்பதும் நமக்கு தெரியும். ஆனால், ஜெயம் ரவிக்கு ஒரு சகோதரியும் இருக்கிறார் என்பது பலரும்  அறிந்திடாத ஒன்று. அவருடைய பெயர் ரோஜா மோகன். அதே போல அவரது அக்காவின் புகைப்படத்தை பல பேர் பார்த்திட வாய்ப்பும் இல்லை. 
 
ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆரவ் மற்றும் அயான் என்ற இரண்டு மகன்களும் இருக்கின்றனர். ஆரவ் டிக் டிக் டிக் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமாகிவிட்டார். 
 
இந்நிலையில் தற்போது, ஜெயம் ரவி தனது குடும்பத்தில் உள்ள பெண்களின் புகைப்படத்தை வெளியிட்டு, ஜெயம் குடும்பத்தின் பில்லர்ஸ் இவர்கள் தான் என பதிவிட்டுள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள் பலரும் குடும்பத்தை வர்ணித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு படம் டிராப்.. மீண்டும் சூர்யாவுடன் ஒரு படம் இயக்கும் வெற்றிமாறன்.. ஆனால் வாடிவாசல் இல்லை.. குழம்பும் ரசிகர்கள்..!

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காம் அஜித் நடிக்கிறாரா? ஆச்சரிய தகவல்..!

ரூ.15 கோடி பட்ஜெட்.. வசூல் ரூ.4 கோடி தான்.. எதிர்பார்த்த வசூலை பெறாத ‘மாரீசன்’..!

ஆசைக்கு இணங்க ரூ.2 லட்சம்.. விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பெண்..!

விண்டேஜ் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… இன்ஸ்டா வைரல் ஃபோட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments