Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை சம்பவம் உறுதி..! GOAT படத்தின் அப்டேட்...!! வெங்கட் பிரபு ட்வீட்..!

Senthil Velan
சனி, 13 ஏப்ரல் 2024 (16:33 IST)
இயக்குனர் வெங்கட் பிரபு தனது X தலத்தில் ‘நாளை சம்பவம் உறுதி என்ற பதிவை வெளியிட்டுள்ளார். 
 
நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
 
சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அடுத்ததாக தற்பொழுது கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் நடைப்பெற்று வருகிறது
 
சமீபத்தில் படப்பிடிப்பு நடக்கும்பொழுது நடிகர் விஜய் ஸ்கேடிங் சைக்கிள் ஓட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. தற்பொழுது படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்..
 
கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது என ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் நடிகர் விஜய் சால்ட் அன் பெப்பர் ஹேர்ஸ்டைலில் கண்ணாடி அணிந்த தோற்றத்தில் காணப்படுகிறார்
 
இதற்கு முன்னதாக இப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் நாளை சம்பவம் உறுதி என்று பதிவிட்டுள்ளார். நாளை (14-4-23) தமிழ் புத்தாண்டை முன்னிட்டு GOAT படத்தின் First Singles வெளியாகவுள்ளது. விஜய் ரசிகர்கள் இதை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு நபர், மரணமற்ற மற்றொரு நபரை சந்திக்கின்றார்... ‘ஏழு கடல் ஏழு மலை’ டிரைலர்..!

ஒரே நாளில் வெளியாகிறதா விக்ரம் மற்றும் ஜெயம் ரவி படங்கள்?

கிளாமர் தூக்கலாக யாஷிகா ஆனந்த் கொடுத்த போஸ்… கலர்ஃபுல் போட்டோஸ்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் போட்டோஸ்!

ஷங்கரை அடுத்து அல்போன்ஸ் புத்ரனுக்குக் கதை கொடுக்கும் கார்த்திக் சுப்பராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments