Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘தி கிரே மேன்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது? அட்டகாசமான போஸ்டர்களோடு வெளியான தகவல்!

Webdunia
திங்கள், 23 மே 2022 (20:35 IST)
தனுஷ் நடித்துள்ள தி கிரே மேன் படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளது.

அவெஞ்சர்ஸ் இயக்குனர்களின் நெட்பிளிக்ஸ் திரைப்படமான ’தி கிரே மேன்’ என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ள நான்கு முக்கிய நட்சத்திரங்களில் தனுஷும் ஒருவர் என்ற அறிவிப்பு வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

தி கிரே மேன் படத்தில் தனுஷ் நடித்து வரும் கதாபாத்திரம் குறித்த விபரங்களை எழுத்தாளர் மார்க் கிரேனி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, இந்த படத்தில் ரயான் காஸ்லிங், கோர்ட் ஜென்ட்ரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரை கொலை செய்ய நினைக்கும் குழுவின் தலைவனாக தனுஷ் நடிக்கிறார் என்று அவர் கூறியுள்ளார். 


சமீபத்தில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. ஜூன் 22 ஆம் தேதி அந்த திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் படத்தில் தனுஷின் கதாபாத்திரம் தொடர்பான ஸ்டைலான புகைப்படமும் வெளியானது. இந்நிலையில் இந்த படத்துக்காக தனி எமோஜியை தற்போது டிவிட்டர் வெளியிட்டுள்ளது. இது சம்மந்தமான அறிவிப்பு தற்போது பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.


இந்நிலையில் படத்தின் புதிய போஸ்டர்கள் இப்போது இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த போஸ்டரில் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் கலைஞர்களின் கதாபாத்திர அறிமுகம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி பாண்டியனின் ரீசண்ட் கார்ஜியஸ் லுக்ஸ்..!

மஞ்சள் நிற உடையில் கண்கவர் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

தக்லைஃப் ஓடிடி ரிலீஸ் முடிவு.. கமல்ஹாசனுக்கு திரையரங்க உரிமையாளர்கள் நன்றி!

கேப்டன் மகனுக்கு இப்படி ஒரு நிலைமையா? தியேட்டரே கிடைக்கவில்லை.. ரிலீஸ் ஒத்திவைப்பு..!

கடைசி நேரத்தில் சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ ரிலீஸ் தள்ளிவைப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments