Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'சர்கார்' கொண்டாட்டம்: சன் பிக்சர்ஸ் அறிவித்த முதல் அறிவிப்பு

Webdunia
புதன், 19 செப்டம்பர் 2018 (11:16 IST)
தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் கொண்டாட்டம் செப்டம்பர் 19 முதல் அதாவது இன்று ஆரம்பம் என்றும் இன்று முதல் ஒவ்வொரு நாளும் சர்கார் படத்தின் புதுப்புது தகவல்கள் வெளியாகும் என்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது

அந்த வகையில் சற்றுமுன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் 'சர்கார் கொண்டாட்டத்தின் முதல் தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி வெளியாகும் என்பதுதான் அந்த தகவல்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள முதல் சிங்கிள் பாடல் நிச்சயம் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களுக்கும் இசை விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தில் இணைந்த பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன்!

மாறி மாறி அறிக்கை விடுவதற்கு ஏன் கோர்ட்டுக்கு வருகிறீர்கள்.. ரவி மோகன், ஆர்த்தியை கண்டித்த நீதிபதி..!

நயன்தாராவை கொஞ்சம் விசாரிச்சா எல்லா உண்மையும் வெளியே வந்துடும்: ரத்தீஸ் குறித்து மாரிதாஸ்

கூலி படத்துக்கு யானை விலை சொல்லும் சன் பிக்சர்ஸ்… தயங்கும் விநியோகஸ்தர்கள்!

நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண்.. ஆர்த்தி ரவியை மறைமுகமாக தாக்கினாரா கெனிஷா?

அடுத்த கட்டுரையில்
Show comments