Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அனுமாருக்கு வெற்றிலை மாலை போடுவது ஏன்?

Advertiesment
அனுமாருக்கு வெற்றிலை மாலை போடுவது ஏன்?
, செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (15:08 IST)
விஷ்ணு அலங்காரப் பிரியர். சிவ பெருமான் அபிஷேகப் பிரியர். அனுமனோ ஸ்தோத்திரப் பிரியர்.

 
"ஸ்ரீராம ஜெய ராமா. ஜெய ஜெய ராமா" என்ற ஸ்தோத்திரம் எங்கெல்லாம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் பிரசன்னமாகின்றவர்.

தினம் இதனை 21 முறை உச்சரிக்க அனுமனின் ஆசி பரிபூரணமாய் கிடைத்திடும்.

பஞ்ச முக அனுமன் வழிபாடு குடும்பத்தில் ஒற்றுமையை தந்து வாழ்வை வளமாக்கிடும். நெடு நாட்களாக தீராத நோய்கள் அனைத்தையும் தீர்த்திடும். வினைகளால் ஏற்பட்ட ரோகங்களை போக்கிடும். ஜோதி சொரூபமான இவரை வழிபட்டால் குடும்பத்தில் நிலவும் கஷ்டங்கள் அனைத்தையும் தீர்ப்பார் என்பது நிச்சயம்.

அனுமனை பூஜித்தால் மனதில் உள்ள குழப்பங்கள் யாவும் தீரும். பணக் கஷ்டங்கள் விலகும். ஆஞ்சநேயர் பூஜை மற்றும் விரதங்களுக்கு ஏற்ற நாள் செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளும்தான். இவ்விரு நாட்களும் அனுமன் கோவிலில் அமர்ந்து அனுமன் சாலீஸா அல்லது ராம சரிதம் படிக்கலாம். அனுமனுக்கு இஷ்ட நாமமான ராம நாமம் பாராயணம் செய்யலாம்.

வெற்றிலை மாலை சாத்தப்படுவது ஏன்?

அசோக வனத்தில் அனுமன் சீதையைக் கண்டு இராமரைப் பற்றிய விவரங்களை கூறி இராமரின் கணையாழியைக் கொடுத்து சூடாமணியைப் பெற்றார். அன்னையிடம் விடைபெறும் சமயம், அனுமனை ஆசிர்வதிக்க எண்ணிய சீதை தான் அமர்ந்திருந்த வெற்றிலைக் கொடியின் இலைகளை பறித்து அனுமாரின் தலையில் புஸ்பமாய் போட்டு ஆசீர்வதித்து வழி அனுப்பி வைத்தார். இதனால் அன்னையின் நினைவாகவே அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கப்படுகின்றது என்று கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறு ஊசி கூட உடன் வராது