விஜய்யின் 'லியோ 'படத்தை ஐமேக்ஸ் தொழில்நுட்பம் வாயிலாக வெளியிட படக்குழு திட்டம்!

Webdunia
வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (14:02 IST)
விஜய் நடிப்பில் லியோ லோகேஷ் இயக்கி வரும் லியோ திரைப்படம் இந்த ஆண்டில் அதிகமாக எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

இப்போது லியோ படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில், இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி உலகம் முழுவதும்  ரிலீஸாகவுள்ளது.

இந்த படத்தில் விஜய்யுடன்  இணைந்து அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர்   நடித்துள்ளனர். இப்போது திடீரென லியோ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியான நிலையில், விஜய்-லோகேஷ் காம்பினேசனில் மாஸ்டர் படத்திற்குப் பின் உருவாகியுள்ள  'லியோ' படத்தின்  மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில்,   நடிகர் விஜய்யின் லியோ படத்தை ஐமேக்ஸ் தொழில்நுட்பம் வாயிலாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

கிளாமர் கேர்ள் யாஷிகாவின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படத் தொகுப்பு!

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் அப்டேட்!

கீர்த்தி சுரேஷின் ‘ரிவால்வர் ரீட்டா’ புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஏழைக்கு கோபம் வந்தால் நேரடியாக அடிப்பான்; ஆனால், பணக்காரனுக்குக் கோபம் வந்தால்.. கவினின் ‘மாஸ்க்’ டிரைலர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments