பேட்ட த்ரிஷா ரோலை கடைசி நேரத்தில் தவறவிட்ட நடிகை வேதனை .!

Webdunia
சனி, 5 ஜனவரி 2019 (16:13 IST)
பேட்ட படத்தில் நடித்திருக்கும் த்ரிஷாவின் கதாபாத்திரதிற்கு ஸ்கிரீன்டெஸ்ட் வரை சென்று கடைசி நேரத்தில் வாய்ப்பை தவறவிட்ட  பிரபல நடிகை  வேதனை தெரிவித்துள்ளார். 


 
ரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ‘பேட்ட’ படம் பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா,  சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
 
ரிலீஸை நெருங்கிவிட்ட பேட்ட படத்தின்  புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் நடிகை த்ரிஷாவின் கதாபாத்திரத்தில் தான்  நடிக்க இருந்த வாய்ப்பை நூலிழையில் தவறிவிட்டேன் என  புலம்பியுள்ளார் நடிகை மீரா மிதுன். ‘8 தோட்டாக்கள்’ படத்தில் நடித்து பிரபலமான இவர் சூர்யா நடிப்பில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்தார். 


 
இந்நிலையில் தற்போது ‘பேட்ட’ படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு மீரா மீதுனுக்கு கிடைத்துள்ளது. அதற்காக  லுக் டெஸ்ட், ஸ்கிரீன் டெஸ்ட் வரை சென்றும் ஏதோ சில காரணங்களால் வாய்ப்பை தவறவிட்டுள்ளார் மீரா . அதற்கு பிறகுதான் அவருக்குப் பதிலாக அந்த கேரக்டரில் நடிகை திரிஷா தேர்வாகி நடித்துள்ளார் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments