Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'வலிமை' பட திரையரங்க விநியோக உரிமையைப் பெற்ற நிறுவனம்!

'வலிமை' பட திரையரங்க விநியோக உரிமையைப் பெற்ற நிறுவனம்!
, சனி, 18 டிசம்பர் 2021 (01:51 IST)
போனிகபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார்- பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி  நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை.

இப்படத்திற்கு உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், சமீபத்தில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலானது.

அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு  அதாவது ஜனவரி 12 அல்லது 13 தேதியில் வலிமை படம்  வெளியாகவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், வலிமை பட ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்துள்ளதாகவும் அதன்படி வரும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி வலிமை படம் வெளியாகும் என தகவல் வெளியாகிறது.

அதில், ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரபாஸ் – பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஸ்யாம் படமும் இதே நாளில் வெளியாகவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. எனவே அஜித்தின் வலிமை படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என தெரிகிறது.

மேலும், வலிமை படத்தின் தியேட்டர் உரிமையை  யுனைட்டட் இந்தியா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாக அந்நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோலியை எச்சரித்த முன்னாள் வீரர்! என்ன செய்யப் போகிறார் கோலி!