Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

''நான் அமர்ந்திருக்கும் நாற்காலி கொல்கிறது''- பிரபல இயக்குனர்

Shooting
, வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (20:53 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில்  உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியான படம் மாமன்னன்.

இப்படம்  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று  ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்துள்ள  நிலையில், சமீபத்தில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி இந்தியாவில் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது.

இப்படத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா கலைஞர்கள், விமர்சகர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட பலரும் கருத்துகள் கூறினர்.

இந்த நிலையில்,  ‘’தமிழ் சினிமாவின் முன்னணி  இயக்குனர் வசந்தபாலன் இப்படத்தைப் பார்த்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், ‘’ மாமன்னன் ஒரு முக்கியமான தனித்துவமான அரசியல் திரைப்படம். இந்த அரசியல் கதையில் நடிக்க தயாரிக்க சம்மதித்த உதயநிதி அவர்கள் பெரிய முன்னெடுப்பு செய்துள்ளார்.

காட்சிகளில் தன் குற்றவுணர்வை, கையாலாகாத்தனத்தை, காலங்காலமாக அடிவாங்கிய வலியை, அடிமைத் தனத்தை பல்வேறு உடல் மொழிகளில் வெளிபடுத்திய வடிவேலு அவர்கள் தான் திரை முழுக்க நிறைந்து நிற்கிறார். மாரியின் பரியேரும் பெருமாள் திரைப்படத்தில்  பரியன் தந்தையும் அவமானத்தை சந்திக்கும் இடம் திரையுலகம் பார்க்காத நிஜம். அது போல இந்த திரைபடத்தில் வருகிற கிணற்றில் பள்ளி மாணவர்கள் குளிக்கிற காட்சி, உதய் அவர்களை நாற்காலியில் அமர சொல்கிற காட்சி என பிறப்பால் ஒதுக்கபடுகிற மனிதர்களின் வலியைத் திரையில் பார்க்கும் போது மெல்ல மெல்ல என் இரவை நான் அமர்ந்திருக்கிற நாற்காலி கொல்கிறது. நாற்காலி அமர அனுமதி மறுக்கப்படுகிறவர்கள் நாற்காலியில் அமர முயலும் கதையே மாமன்னன்.

காலம் கொண்டாடும்’’ என்று தெரிவித்துள்ளார். இதற்கு இயக்குனர் மாரி செல்வராஜ் நன்றி கூறியுள்ளார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எந்த வதந்தியும் பரப்பாதீர்கள்... கணவரை இழந்த வேதனையில் பிரபல நடிகை வீடியோ வெளியீடு!