Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் மீது வழக்குப் பதிவு செய்தது சரிதான்: சீமான் பேட்டி

Webdunia
திங்கள், 19 நவம்பர் 2018 (12:23 IST)
சர்கார் பட போஸ்டரில் புகைப்பிடிப்பது போன்று தோன்றியதுக்காக நடிகர் விஜய் மீது கேரள அரசு வழக்கு தொடர்ந்தது சரியானதுதான் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
 
 நடிகர் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் கொண்ட சர்கார் பட போஸ்டர்கள் தமிழகம் மட்டுமில்லாமல் கேரளா முழுவதும் ஒட்டப்பட்டிருந்தது.
 
இந்த புகைப்படம் சமூகத்தில் தீய பழக்கங்களை ஊக்குவிப்பதாக கூறி  கேரள அரசு நடிகர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்தது. 
 
கேரள அரசின் நடவடிக்கைக்கு ஆதரவாக  சீமான் கருத்து தெரிவித்துள்ளார். 
 
வ.உ.சிதம்பரனாரின் 82-வது நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறுகையில், "கேரள அரசு, விஜய் மீது வழக்குப் பதிவு செய்தது சரிதான். இதை உணர்ந்து தம்பி விஜய் மட்டுமல்ல மற்ற நடிகர்களும் இதுபோன்ற காட்சிகளைத் தவிர்க்க வேண்டும். இதற்கெல்லாம் முன்மாதிரியாக நமக்கு எம்.ஜி.ஆர். இருந்திருக்கிறார். எனவே இதை பின்பற்ற வேண்டும் என்று அக்கறையோடு சொல்கிறேன்" என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரம் படத்திலிருந்து விலகிய மடோன் அஸ்வின்: ராம்குமார் பாலகிருஷ்ணன் இணைகிறாரா?

ரிலீஸ் ஆக முடியாமல் திணறும் வெற்றிமாறனின் 2 படங்கள்.. ரூ.20 கோடி முடக்கமா?

சிம்பு - தேசிங்கு பெரியசாமி படம் டிராப்பா? இருவரும் சேர்ந்து எடுத்த அதிரடி முடிவு..!

திரையரங்குகளில் பெங்காலி திரைப்படங்களுக்கே முன்னுரிமை: மம்தா அறிவிப்பால் பாலிவுட் அதிர்ச்சி..!

ஹெல்மெட் அணிந்து சென்ற பெண்களுக்கு ‘கூலி’ படத்தின் 4 டிக்கெட்டுக்கள்.. இன்ப அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments