Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வைரமுத்துவுக்கு விருது வாங்கி கொடுத்த பாட்டு இதுதான்

வைரமுத்துவுக்கு விருது வாங்கி கொடுத்த பாட்டு இதுதான்
, சனி, 8 ஏப்ரல் 2017 (06:02 IST)
கவியரசர் வைரமுத்து அவர்கள் 'தர்மதுரை' படத்திற்காக எழுதிய 'எந்த பக்கம்' என்னும் பாடல் தேசிய விருது பெற்றது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த பாடலுக்காக எனக்கு கிடைத்த விருது, தமிழுக்கு கிடைத்த விருதாக கருதுவதாகவும், தற்கொலைக்கு எதிராக தான் எழுதிய இந்த பாடல் விருது பெற்றதற்கு மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் கூறியுள்ளார்



 


'தர்மதுரை' படத்திற்காக வைரமுத்து எழுதிய முழு பாடல் இதுதான்:

எந்தப் பக்கம் காணும் போதும் வானம் ஒன்று
நீ எந்தப் பாதை ஏகும் போதும் ஊர்கள் உண்டு
ஒரு காதல் தோல்வி காணும் போதும் பாடல் உண்டு
சிறு கரப்பான் பூச்சி தலை போனாலும் வாழ்வு உண்டு
அட ரோராப் பூக்கள் அழகால் அது தேனை சிந்தும்
என் ராஜாப் பையன் நீ அழுதால் அதில் ஞானம் மிஞ்சும்
உன் சோகம் ஒரு மேகம் நான் சொன்னால் அது போகும்
உன் கண்ணீர் ஏந்தும் கன்னம் நானாகும்

எந்தப் பக்கம் காணும் போதும் வானம் ஒன்று
நீ எந்தப் பாதை ஏகும் போதும் ஊர்கள் உண்டு

எப்போதுமே இன்பம் என்றால் முன்னேற்றமே ஏது
எப்போதுமே பகலாய்ப் போனால் வெப்பம் தாங்காது
மனசை சலவை செய்ய ஒரு கண்ணீர் துளி தான் உண்டு
உன் உயிரை சலவை செய்ய ஒரு காதல் நதி உண்டு
உன் சுவாசப் பையை மாற்று அதில் சுத்தக் காற்றை ஏற்று
நீ இன்னோர் உயிரில் இன்னோர் பெயரில் வாழ்ந்து விடு

சந்தர்ப்பமே தீமை செய்தால் சந்தோஷமே ஏது
சல்லடையில் தண்ணீர் அள்ளி தாகம் தீராது
தாகம் தீரத் தானோ நீ தாய்ப் பால் மழையாய் வந்தாய்
நம் உறவின் பெயரே தெரியாதம்மா உயிரை தருகின்றாய்
உன் உச்சந்தலையை தீண்ட ஓர் உரிமை உண்டா பெண்ணே
உன் உள்ளங்காலில் தலையை சாய்த்தால் போதும் கண்ணே…

எந்தப் பக்கம் காணும் போதும் வானம் ஒன்று
நான் எந்தப் பாதை ஏகும் போதும் ஊர்கள் உண்டு
நீ தாவித் தாவித் தழுகும் போதும் தாய்மை உண்டு
நான் நெஞ்சாங்கூட்டில் சாயும் போதும் நேர்மை உண்டு
உன் வார்த்தைக்கு பின்னால் என் வாழ்வே பின்னால்
உன் மடியில் எந்தன் கண்ணீர் வடியுமடி
உன் சோகம் ஒரு மேகம் நான் சொன்னால் அது போகும்
உன் கண்ணீர் ஏந்தும் கன்னம் நானாகும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல் வீட்டில் தீ விபத்து: பாதுகாத்து வைத்திருந்த பொக்கிஷங்கள் சாம்பல்