அந்த நடிகையோட அந்த மாதிரியான உறவு இல்லிங்க... சத்தியம் செய்யும் நடிகர்

வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (18:01 IST)
கிரிக்கெட் படத்தில் நடித்தாலும் மதுரையில் உள்ள நகரத்தின் பெயரில் வந்த படத்தின் மூலம் பிரபலமானவர் அந்த நடிகர். 


 
அதன் பின்பு பல படங்களில் நடித்து தமிழில் முக்கியமான நடிகராக உள்ளார். அவருக்கும்  'அ' என்ற பெயரில் தொடங்கும் நடிகையும் காதலித்து வருவதாக கூறப்பட்டது. அ நடிகையும் ஜெயமான அந்த நடிகருடன் சில படங்களில் சேர்ந்து நடித்துள்ளார். இருவரும் சேர்ந்து பல இடங்களில் சுற்றுவதுடன், திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்பட்டது. 
 
இதனை இருவரும் நீண்டகாலமாக மறுக்காமல் இருந்தனர். இந்நிலையில் ஜெயமான அந்த நடிகரிடம்  கேட்டதுக்கு, கலகலப்பான அந்த நடிகை, எனக்கு நல்ல தோழி, எங்களுக்குள் அந்த மாதிரியான எந்த உறவும் இல்லை என்று சத்தியம் செய்யாத குறையாக சொல்லியுள்ளார். ஜெயமான அந்த நடிகர்  இப்போது மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் உதயநிதியின் 'கண்ணை நம்பாதே' படத்தில் இணையும் சதீஷ்