பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமானவர்களில் முக்கியமானவர் தர்ஷன். இலங்கையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இவர் தமிழக மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார். மாடல் துறையில் இருந்த இவரது ஆரம்பகால வாழ்க்கை சரியான பாதையில் கொண்டு சேர்த்து இவரது காதலி சனம் ஷெட்டி தான். இவரை சினிமாவில் அறிமுகப்படுத்தி அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்ததும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற வாய்ப்பு தேடி கொடுத்ததும் சனம் ஷெட்டி தான்.
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே தனக்கு ஒரு அழகான காதலி இருப்பதாக தர்ஷன் கூறியிருந்தார். சனம் ஷெட்டியும் தர்ஷன் குறித்து நிறைய பேட்டிகளில் பேசியிருக்கிறார். இதைக்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிச்சயம் செய்து விட்டு தர்ஷன் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக சென்னை காவல் ஆணையரிடம் புகாரளித்து ஷனம் ஷெட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்திருந்தார். அதையடுத்து தர்ஷன்.... சனம் ஷெட்டி தன்னுடைய முன்னாள் காதலருடன் நைட் பார்ட்டியில் இருந்தார் என குண்டு தூக்கி போட்டார். இந்த விவகாரம் சமூகவலைத்தளங்களில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் தற்போது தர்ஷனுடன் சனம் ஷெட்டி அரைகுறை ஆடையணிந்து படுக்கைறையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.